/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி சீசன் துவக்கம்; வரத்து அதிகரிப்பு வெளிமாவட்டங்களுக்கும் 'பறக்கிறது'
/
தக்காளி சீசன் துவக்கம்; வரத்து அதிகரிப்பு வெளிமாவட்டங்களுக்கும் 'பறக்கிறது'
தக்காளி சீசன் துவக்கம்; வரத்து அதிகரிப்பு வெளிமாவட்டங்களுக்கும் 'பறக்கிறது'
தக்காளி சீசன் துவக்கம்; வரத்து அதிகரிப்பு வெளிமாவட்டங்களுக்கும் 'பறக்கிறது'
ADDED : ஜூலை 31, 2024 02:41 AM

உடுமலை:உடுமலை பகுதியில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், வெளி மாவட்டங்களுக்கும் கொள்முதல் அதிகரித்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விளையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், நடப்பு சீசனில், வறட்சி மற்றும் மழை காரணமாக சாகுபடியில்லாத நிலையில், உடுமலை பகுதியில் மட்டும், ஆக., முதல் நவ., வரை நான்கு மாதம், தக்காளி சீசன் காலமாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழை துவங்கிய நிலையில், நல்ல விலை கிடைத்து வந்ததால்,உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது. மற்ற பகுதிகளில் விளையாத போது, உடுமலை பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்து வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
உடுமலை சந்தைக்கு சராசரியாக, 14 கிலோ கொண்ட பெட்டி, 6 முதல் 7 ஆயிரம் வரை வரத்து இருக்கும். தற்போது உடுமலை தக்காளி சீசன் துவங்கியுள்ளதால், தினமும், 15 ஆயிரம் முதல், 25 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது.
உடுமலை சந்தையில், தற்போது, ஒரு பெட்டி, ரூ.350 வரை விற்று வருகிறது. வரத்து அதிகரித்துள்ள நிலையில், கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பல்வேறு மாவட்ட விவசாயிகள் சந்தைக்கு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
இவை, லாரிகள் வாயிலாக, காரைக்குடி, பரமக்குடி, வேலுார், மதுரை, திருச்சி, விருதுநகர், சங்கரன்கோவில், சேலம் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது.
வியாபாரிகள் கூறியதாவது :
உடுமலை சுற்றுப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி நடவு செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்யப்படும் மற்ற பகுதிகளில், இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுவதில்லை. உடுமலை பகுதியில் மட்டும் தக்காளி சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.
உடுமலை பகுதியில் மட்டும், மழை காலத்திலும், வரத்து இருக்கும் நிலையில், வரத்து அதிகரித்தாலும், வியாபாரிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, விலை சரிவு இருக்காது.
இவ்வாறு, தெரிவித்தனர்.