/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை -அரசு கலை கல்லுாரியில் முதலாமாண்டு துவக்கம்
/
நாளை -அரசு கலை கல்லுாரியில் முதலாமாண்டு துவக்கம்
ADDED : ஜூலை 02, 2024 12:16 AM
திருப்பூர்:நாளை (ஜூலை 3) அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் துவங்குகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிகள் மே, 6 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இளங்கலை பட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க, மே முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. கடந்த ஒன்றை மாதமாக சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு கவுன்சிலிங் அடுத்தடுத்து நடந்து வந்தது.
பெரும்பாலான கல்லுாரிகளில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பிய நிலையில், கூடுதல் ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் மட்டும் விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு முதல் அனைத்து கல்லுாரிகளிலும் ஒரே நேரத்தில் பல்கலை தேர்வுகளை நடத்தி முடிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால், ஜூலை, 3ம் தேதி அனைத்து கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க, கல்லுாரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம், அவிநாசி, காங்கயம் அரசு கல்லுாரிகளில் ஜூலை, 3 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க உள்ளது.