/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதா? துவங்காத சாலைப்பணி; மக்கள் முற்றுகை
/
தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதா? துவங்காத சாலைப்பணி; மக்கள் முற்றுகை
தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதா? துவங்காத சாலைப்பணி; மக்கள் முற்றுகை
தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதா? துவங்காத சாலைப்பணி; மக்கள் முற்றுகை
ADDED : ஏப் 29, 2024 11:25 PM

திருப்பூர்:துவங்காத சாலைப்பணியால், சில கி.மீ., துாரம் சுற்றிவர வேண்டியுள்ளதால் ஆவேசமடைந்த மக்கள், மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்டம், வள்ளலார் அவென்யூ உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன.
முத்தணம்பாளையம் - விஜயாபுரம் இணைப்பு ரோடு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இரு மாதங்கள் முன்பு டெண்டர் விடப்பட்ட நிலையில் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. அப்பகுதியை பயன்படுத்தி அனைவரும் சில கி.மீ., துாரம் வரை சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோடு அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது. இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
மக்கள் சிரமத்தை புரிந்து கொண்டு உடனடியாக ரோடு அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியவாறு நல்லுாரில் உள்ள, மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லுார் போலீசார் பேச்சு நடத்தினர்.
மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், இப்பணியில் உள்ள சில சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, உடனடியாக பணி துவங்கப்படும் என்று உறுதியளித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

