/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையில் வெயில் தாக்கம் வியாபாரிகள் கடும் அவதி
/
சந்தையில் வெயில் தாக்கம் வியாபாரிகள் கடும் அவதி
ADDED : மார் 03, 2025 05:01 AM

பல்லடம்: பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு கடை அமைத்து, காய்கறிகள், மளிகைப்பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்கின்றனர்.
இதன் மூலம், ஏராளமான சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பயனடைகின்றனர்.
தற்போது வெயில் தாக்கம் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காய்கறிகள், கீரைகள் போன்றவை விரைந்து வாடுகின்றன.
வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வியாபாரிகள் தற்காலிகமாக தார்பாலின், துணிகளை விரித்துள்ளனர்.
இருப்பினும், இவற்றைக் கட்டுவதில் இடையூறு ஏற்படுவதுடன், காற்றில் பறந்தும், கீழே தொங்கியும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில், வாரச்சந்தை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதற்கேற்ப கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்; இங்குள்ள கழிப்பிடத்தை சீராக்க வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.