/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வியாபாரிகள் நலச்சங்க இரண்டாம் ஆண்டு விழா
/
வியாபாரிகள் நலச்சங்க இரண்டாம் ஆண்டு விழா
ADDED : செப் 03, 2024 01:58 AM
உடுமலை;துங்காவி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின், இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மடத்துக்குளம் துங்காவி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில், சங்கத்தின் தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். சங்கப்பொருளாளர் கணேஷ்குமார் வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பேசினர்.
விழாவில், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். வணிகர் நல வாரியத்தை சிறப்பாக செயல்படுத்தி தேவையான உதவிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துங்காவி வியாபாரிகள் சங்க செயலாளர் வெற்றிவேல் நன்றி தெரிவித்தார்.