/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரம்பரிய நெல்வகை பாதுகாப்பு கருத்தரங்கம்
/
பாரம்பரிய நெல்வகை பாதுகாப்பு கருத்தரங்கம்
ADDED : மே 27, 2024 11:59 PM

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், இரண்டு மாதமாக பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தி வந்தனர்.
இதன் நிறைவு நிகழ்ச்சியாக, வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள முன்னோடி விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார். மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் கலைவாணி, கல்லுாரி முதல்வர் பிரபாகர், முனைவர் முத்துகிருஷ்ணன், இணைப் பேராசிரியர் மற்றும் மண்ணியல் துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலைத்துறை தலைவர் ரவிக்குமார், விவசாய பொருளாதார துறை இணைப்பேராசிரியர் சங்கரி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியதுவம், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம், சத்தான உணவு முறைகள், இயற்கை வேளாண்மையின் அவசியம், சாகுபடியில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து விவசாயிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.