/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
/
உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 19, 2024 01:29 AM
உடுமலை;உடுமலை உழவர் சந்தை ரோட்டில், வாகனங்கள் விதிமுறையில்லாமல் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை உழவர் சந்தை ரோடு, பஸ் ஸ்டாண்டிலிருந்து தளி ரோடு செல்வோருக்கும், சுற்றுலா பயணியர் செல்வதற்கும் பிரதான வழித்தடமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன.
அதே ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனும் இருப்பதால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாகவும் உள்ளது.
இங்குள்ள உழவர் சந்தைக்கு வருவோர், வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை. ரோட்டில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சந்தைக்கு செல்கின்றனர்.
பொதுமக்கள் நடந்து செல்லும் அளவுக்கு மட்டுமே, இடைவெளி விட்டு ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, விடுமுறை நாட்களில் நடந்து செல்வதற்கும், இடையூறாகும் அளவுக்கு, அந்த ரோட்டில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், வாகனங்கள் நிறுத்துவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
காலை நேரங்களில் அவ்வழியாக செல்வோர், போக்குவரத்து நெரிசலால் வேறு வழியாக தொலைதுாரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது.
போக்குவரத்து போலீசார் இப்பிரச்னையை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.