நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் வழித்தடங்களில் பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால், பெங்களூரு, தன்பாத் ரயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
வரும், 10, 12 மற்றும், 15ம் தேதி, ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352), எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (எண்:12678) இரு ரயில்களும், பாலக்காட்டில் இருந்து இருகூர் வழியாக திருப்பூர் ஸ்டேஷன் வரும். கோவை ஜங்ஷன் செல்லாது. பயணிகள் வசதிக்காக போத்தனுார் ஸ்டேஷனில் நின்று, இருகூர் வழித்தடத்தில் இயங்கும் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.