ADDED : ஜூலை 06, 2026 08:30 PM

உடுமலை: உடுமலை நகராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
நாடு முழுவதும் நடப்பாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. உடுமலை நகராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
நகராட்சி கமிஷனர் விநாயகம் தலைமை வகித்தார். இதில், 44 ஆசிரியர்கள் மற்றும் களப்பயிற்சியாளர்கள், பயிற்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், வீடு, வீடாக சென்று, 34 வகையான பொருள்கள் குறித்து, தகவல் சேகரித்து, அதற்காக வழங்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
சுய கணக்கெடுப்பு வரும் 17ல் துவங்கி, 31 வரையும், தள கணக்கெடுப்பு பணி, ஆக., 1ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும். பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப்பட்டது.
