தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்குப் பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்குப் பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்குப் பயிற்சி


ADDED : ஜூலை 09, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வரும் 2027 ஜன. மாதம் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்புகள், திருமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடங்கின.

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பகுதி வாரியாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கடந்த மாதம் மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் வாயிலாக தற்போது கள அலுவலர்களுக்கு முதல் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஊராட்சிப் பகுதிகளுக்கான பயிற்சி, திருப்பூர் ஹார்வே குமாரசாமி திருமண மண்டபத்தில் வடக்கு தாசில்தார் கண்ணாமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில், அப்பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 75 அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதேபோல், திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி, மண்டல அலுவலக கூட்டரங்கில் உதவி கமிஷனர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. 50 அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த மண்டலத்தில் பணியாற்றவுள்ள மொத்தம் 250 அலுவலர்களுக்கு, ஐந்து கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் கட்டப் பயிற்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை, தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் முறை ஆகியன குறித்து விளக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us