/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனை சான்றிதழ் நடைமுறைக்கு பயிற்சி
/
வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனை சான்றிதழ் நடைமுறைக்கு பயிற்சி
வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனை சான்றிதழ் நடைமுறைக்கு பயிற்சி
வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனை சான்றிதழ் நடைமுறைக்கு பயிற்சி
ADDED : ஜூன் 07, 2024 07:55 PM
திருப்பூர்:ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு வகை மானிய சலுகைகளை வழங்கி வருகிறது. மானியம் வழங்கியதற்கு உரிய பயன் கிடைத்துள்ளதா என்பதை அரசு உறுதி செய்கிறது. வெளிநாட்டில் இருந்து பணம் பரிவர்த்தனையானதும், வங்கிகள், அதன் விவரத்தை, வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தன. தற்போது ஏற்றுமதியாளர்களே இதே இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை உள்ளது. இதைத் தொடர்ந்து, இ.பி.ஆர்.சி., - எலக்ட்ரானிக் பாங்க் ரியலைஷேசன் சர்டிபிகேட், சான்றிதழை பதிவேற்ற வேண்டும்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக பண பரிவர்த்தனையை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேரடியாக கண்காணிக்கின்றன. ஏற்றுமதியான, சரக்கிற்குரிய தொகை, 5 சதவீதத்துக்கு மேல் குறைவாக வரக்கூடாது. பணம் குறைவாக வந்தால், மானியத்தை, வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதில், குழப்பங்கள் இருப்பதால், வரும் 11ம் தேதி, வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு தொழில்நுட்ப குழுவினர், ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்க உள்ளனர். ஏற்றுமதியாளர் பயிற்சியில் பங்கேற்று, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்' என்றனர்.