/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை உரம் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி
/
இயற்கை உரம் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : மே 28, 2024 11:35 PM

உடுமலை;பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உரங்களை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் பல்கலையில், தோட்டக்கலை பிரிவு படித்து வரும், மாணவியர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், தேவனுார் பகுதிகளில் களப்பயிற்சி மேற்கொண்டு வருவதோடு, விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பயிர்களுக்கு தேவையான சத்தான உரங்கள் தயாரித்தல் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
மாணவியர், வெர்மிகோல்டு நிறுவனத்தில், மண்புழு, சாணம், வீட்டுக்கழிவுகளைக் கொண்டு, பல டன் உரங்கள் உற்பத்தி செய்வது மற்றும் தென்னை நார் உற்பத்தி குறித்து விளக்கினர்.
விவசாயிகள், பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டி மருந்துகளை பயன்படுத்துவதால், சாகுபடி செலவு குறைவதோடு, ரசாயன கலப்பற்ற, சத்தான உணவு பொருள் உற்பத்தி செய்ய முடியும், என விளக்கினர்.