/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் ஆய்வு பணிக்கான பயிற்சி
/
தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் ஆய்வு பணிக்கான பயிற்சி
தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் ஆய்வு பணிக்கான பயிற்சி
தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் ஆய்வு பணிக்கான பயிற்சி
ADDED : மார் 04, 2025 06:18 AM

உடுமலை; திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கற்றல், கற்பித்தல் ஆய்வுத்திட்ட பணிகளுக்கான, ஆய்வு கருவிகள் தயாரித்தல் பயிற்சி துவங்கியுள்ளது.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 'தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் உயர்நிலை சிந்தனை பகுப்பாய்வு' என்ற தலைப்பில் ஆய்வுத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வுக்கான ஆய்வு கருவிகள் தயாரித்தல் பயிற்சி நேற்று துவங்கியது. பயிற்சி, இன்று மற்றும் 7 ம்தேதியும் நடக்கிறது. பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரவணகுமார் வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
நிறுவன துணை முதல்வர் விமலாதேவி, விரிவுரையாளர் சுப்ரமணி பயிற்சி குறித்து பேசினர். ஆய்வாளர் ராஜன் தமிழ் மொழி பாடத்திற்கான கலைத்திட்ட வடிவமைப்பு உட்பட ஆய்வு கருவிகள் தயாரிப்பது குறித்து விளக்கமளித்தார்.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தை சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.