/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து கழக ஊழியர் உண்ணாவிரதம் துவக்கம்
/
போக்குவரத்து கழக ஊழியர் உண்ணாவிரதம் துவக்கம்
ADDED : ஜூன் 25, 2024 12:49 AM

திருப்பூர்;அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர் பணியில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், நடத்துனர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப, குறிப்பிட்ட சில கோட்டங்களில் இருந்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், மாநிலம் முழுதும், 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவக்கியது.
திருப்பூர் காங்கயம் ரோடு, திருப்பூர் கிளை, 2 முன் துவங்கிய உண்ணாவிரதத்துக்கு, சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று காலை துவங்கிய உண்ணாவிரத போராட்டம், இன்று காலை 11:00 மணி வரை நடக்கிறது.