/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலில் பிளாஸ்டிக் கயிறு சிக்கி பாதித்த யானைக்கு சிகிச்சை
/
காலில் பிளாஸ்டிக் கயிறு சிக்கி பாதித்த யானைக்கு சிகிச்சை
காலில் பிளாஸ்டிக் கயிறு சிக்கி பாதித்த யானைக்கு சிகிச்சை
காலில் பிளாஸ்டிக் கயிறு சிக்கி பாதித்த யானைக்கு சிகிச்சை
ADDED : மே 28, 2024 08:47 PM

உடுமலை:கேரளா மாநிலம், மறையூர், காந்தலுார், பெரட்டிபள்ளம் வனப்பகுதியில், 20 வயது பெண் யானை, முன் இடது காலில், காயத்துடன் சுற்றி வந்தது.
மறையூர், மூணார், வயநாடு பகுதியிலிருந்து, 27 பேர் கொண்ட வன மீட்பு குழுவினர், நேற்று காலை, யானை இருந்த இடத்திற்கு வந்தனர். வனத்துறை டாக்டர் அனுராஜ், மோகன்தாஸ் கொண்ட குழுவினர், இரு முறை துப்பாக்கி வாயிலாக மயக்க ஊசி செலுத்தினர். ஒரு மணி நேரத்தில் யானை மயக்கமடைந்தது.
சுற்றிலும் கயிறுகள் கட்டி, பாதுகாப்பாக யானையின் முன் காலில் இருந்த காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். காலை, 7:00 மணிக்கு துவங்கிய சிகிச்சை, 11:00 மணிக்கு நிறைவடைந்தது. மயக்கம் தெளிந்த யானை, வனத்திற்குள் வழக்கம் போல நடந்து சென்றது.
வனத்துறையினர் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்கள், வனத்திற்குள் பிளாஸ்டிக், நைலான் கயிறுகள், கண்ணாடி பாட்டில்களை வீசுவதால், வன விலங்குகள் பாதிக்கின்றன.
காட்டை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் யானை உட்பட வன விலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.