/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் மரக்கன்று நடும் விழா; மாணவர், பெற்றோர் பங்கேற்பு
/
பள்ளியில் மரக்கன்று நடும் விழா; மாணவர், பெற்றோர் பங்கேற்பு
பள்ளியில் மரக்கன்று நடும் விழா; மாணவர், பெற்றோர் பங்கேற்பு
பள்ளியில் மரக்கன்று நடும் விழா; மாணவர், பெற்றோர் பங்கேற்பு
ADDED : ஆக 01, 2024 10:36 PM

உடுமலை : உடுமலை பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். கணித ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். 'வாழ்க்கையின் குறிக்கோள் தினம்' குறித்து பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் பேசினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பெற்றோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
எதிர்கால கல்வி வாய்ப்புகள் குறித்தும், அதற்கு மாணவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், வேதியியல் ஆசிரியர் ஜெகன்நாதா ஆழ்வார் சாமி பேசினார். மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆசிரியர் மகுடேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.