ADDED : ஜூலை 28, 2024 12:11 AM

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், அப்துல் கலாமின் பதவி, அவர் ஆற்றிய பணி, விஞ்ஞானியான அவரது சாதனை உள்ளிட்வை குறித்து பேசினார். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, ஜெயலட்சுமி மற்றும் ரூபினா ஆகியோர் தலைமையில் அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மெழுகுவர்த்தி வைத்து, கலாம் உருவ முககவசத்தை அணித்தும் அவருக்கு மாணவ, மாணவியர் மரியாதை செய்தனர்.'தேசத்தின் முக்கியத்துவத்தை மதித்து நடப்பேன், இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் அங்கமான நான், எடுக்கின்ற அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற துணிச்சலோடும் வீரத்தோடும் விவேகத்தோடும் உழைப்பேன்,' என, பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
---
சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, என்.எஸ்.எஸ்., - 2 சார்பில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமுக்கு மலரஞ்சலி செலுத்திய மாணவர்கள்.