/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளி வரை மட்டும் திருச்சி பாசஞ்சர் ரயில்
/
ஊத்துக்குளி வரை மட்டும் திருச்சி பாசஞ்சர் ரயில்
ADDED : ஆக 02, 2024 05:22 AM
திருப்பூர் : 'திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில் பணி நடப்பதால், திருச்சி ரயில் ஊத்துக்குளி வரை மட்டும் இயக்கப்படும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல், கடந்து செல்லும் சூப்பர்பாஸ்ட், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களை மணிக்கு, 140 கி.மீ., வேகத்தில் இயக்க தேவையான பணி நடந்து வருகிறது. இரண்டு 'மெயின்லைன்' மற்றும் 'சப்லைனில்' தண்டவாளங்களை விரிவுபடுத்தி, மறுகட்டமைப்பு செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இன்று ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் மற்றும் 'யார்டு' அருகே பணி நடப்பதால், திருச்சியில் இருந்து பாலக்காடு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16843) ஊத்துக்குளி ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும்.
அதே நேரம், பயணிகள் வசதிக்காக, மாலை, 5:30 மணிக்கு ஊத்துக்குளியில் இருந்து பாலக்காடு வரை சிறப்பு ரயில் புறப்படும்.
பாசஞ்சர் ரயில் நின்று செல்லும் ஸ்டேஷன்களில் சிறப்பு ரயிலும் நின்று செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.