ADDED : மார் 10, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர், குமரன் சிலை முன் நடந்த போராட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநகர மாவட்ட மகளிரணி தலைவர் வினிதா, மகளிரணி பொருளாளர் கில்ஷா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி உள்ளிட்டோர் பேசினார்.
முன்னதாக பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவங்கி வைக்கப்பட்டது.