/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை காப்பாற்ற லாரி நீர் விவசாயிகள் கண்ணீர்
/
தென்னை காப்பாற்ற லாரி நீர் விவசாயிகள் கண்ணீர்
ADDED : ஜூலை 07, 2024 12:11 AM
பொங்கலுார்:திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை பொய்த்துப் போனது. நிலத்தடி நீர்மட்டம் வற்றி வருகிறது. பல்லாண்டு பயிரான தென்னை மரங்களுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பல விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் கிணறுகளை அமைத்து வருகின்றனர். அதிலும் தண்ணீர் வருவதில்லை. வேறு வழி இன்றி லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை பொய்த்துப் போனது, பி.ஏ.பி.,யில் கடந்த ஆண்டு மழை இல்லாததால் பாசன காலம் குறைக்கப்பட்டது போன்ற காரணங்களால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
''இன்னும் பருவ மழை காலம் துவங்க இரண்டு மாதங்கள் உள்ளது. காற்று பலமாக வீசுவதால் இருக்கின்ற தண்ணீரும் வற்றி வருகிறது. பல இடங்களில் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை காய்ந்து விட்டால் அதை மீண்டும் காய்ப்புக்கு கொண்டு வர பல ஆண்டுகள் ஆகிவிடும். இதனால், வேறு வழி இன்றி லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி காப்பாற்றி வருகிறோம்'' என்றனர்.