/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 பைக் மோதியதில் இரு வாலிபர் பலி
/
2 பைக் மோதியதில் இரு வாலிபர் பலி
ADDED : மே 28, 2024 12:41 AM
பொங்கலுார்;கொடுவாய் அருகே இரு பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக், 23; தொங்குட்டிபாளையம் ஊராட்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்த மணி மகன் சந்துரு, 22; கூலித் தொழிலாளர்கள்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு காஸ் சிலிண்டர் எடுத்து செல்ல, அவிநாசிபாளையத்திலிருந்து கொடுவாய் நோக்கி பல்சர் பைக்கில் சென்றனர். தாராபுரம் ரோடு, கொடுவாய் - செங்காட்டுப் பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் கார்த்திக், சந்துரு ஆகியோர் பலத்த காயமுற்று அதேயிடத்தில் உயிரிழந்தனர்.
மற்றொரு பைக்கில் வந்த பல்லடம், நாராணா புரம் - மகாலட்சுமி நகரைச் சேர்ந்த வீரராகவன், 44 என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.