/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் நிலைய டூவீலர் ஸ்டாண்ட் 3 மாதமாக நகரவே நகராத பணி
/
ரயில் நிலைய டூவீலர் ஸ்டாண்ட் 3 மாதமாக நகரவே நகராத பணி
ரயில் நிலைய டூவீலர் ஸ்டாண்ட் 3 மாதமாக நகரவே நகராத பணி
ரயில் நிலைய டூவீலர் ஸ்டாண்ட் 3 மாதமாக நகரவே நகராத பணி
ADDED : மே 27, 2024 01:10 AM

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்க பணி கடந்தாண்டு செப்., மாதம் முதல் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குமரன் நினைவிடம் அருகே, 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த டூவீலர் ஸ்டாண்ட் மேற்கூரை, இடித்து கடந்த பிப்., 26ல் அகற்றப்பட்டது.
டூவீலர்கள் நிறுத்த தற்காலிகமாக புக்கிங் ஆபீஸ், ஆர்.பி.எப்., ஸ்டேஷன் எதிரே இடம் ஒதுக்கப்பட்டது. கார்கள் கூட்ஸ்ெஷட் அருகே திறந்த வெளியில் நிறுத்தப்பட்டது.
ஸ்டாண்ட் இடமாற்றம் செய்து மூன்று மாதமாகியுள்ள நிலையில், தற்போது வரை எந்த பணி துவங்காமல் உள்ளது.
இரவில் விரும்பத்தகாத செயல்கள் நடப்பதுடன், திறந்தவெளியை பலரும் அசுத்தம் செய்து வருகின்றனர். மழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், தற்காலிக ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்கள் மழையில் நனைந்து, வெயிலில் காய்கிறது. நாள் கணக்கில் இதே நிலை தொடர்வதால், பெட்ரோல் அளவு குறைவதுடன், டயர்களில் காற்றும் இறங்கி விடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினசரி, 500க்கும் மேற்பட்டோர் டூவீலர் நிறுத்தி விட்டு ரயிலில் கோவை, ஈரோடு பணிக்கு சென்று விட்டு மாலையில் வருகின்றனர். தற்காலிக ஸ்டாண்டில் இடபற்றாக்குறையும் நிலவுகிறது. ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் ஸ்டாண்ட் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.

