/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை நாராயணகவிக்கு பாரதியுடன் மலர்ந்த நட்பு
/
உடுமலை நாராயணகவிக்கு பாரதியுடன் மலர்ந்த நட்பு
ADDED : ஆக 14, 2024 11:23 PM

திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மையோடு விளங்கியவர் உடுமலை நாராயணகவி. உடுமலை, பூளவாடியில், 1899ல், பிறந்தார்.
இளமையில் நாட்டு புறக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கைப்பாட்டு, ஒயில் கும்மி போன்றவற்றில் மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்த நாராயணகவிக்கு, தேச விடுதலை மீது நாட்டமும், தேசபக்தியும் மிகுந்திருந்தன. அன்னிய துணிகளை புறக்கணிக்க வேண்டும். சுதேசி ஆடைகளை அனைவரும் அணிய வேண்டும் என்ற உணர்வு காரணமாக, ஒரு கதர் கடையை துவங்கினார். கிராம, கிராமமாக சென்று, தேச விடுதலை பாடல்களை பாடி கதர் துணிகளை விற்பனை செய்தார்.
இவர் வறுமையில் வாடினாலும், கவிதை எழுதும் ஆர்வத்தில், 15வது வயதில், மகாகவி பாரதியாரை சந்தித்தார். ஆரம்பத்தில், ஆன்மீக பாடல்களை எழுதிய நாராயணகவி, பாரதியாரின் நட்புக்கு பின், பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமுதாய பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர்.
குறிப்பாக, விடுதலை போராட்டத்தின் போது, தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைதோறும் முழங்கியவர்.