/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முற்றுப்பெறாத விவகாரம் l புதிய இயக்கத்துக்கு அனுமதி l முற்றுப்பெறாத விவகாரம்

ADDED : ஜூன் 30, 2024 12:30 AM
பல்லடம் ஆட்டோ டிரைவர்களுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் பஸ் ஸ்டாண்டில், புதிதாக ஆட்டோக்களை இயக்க சிலர் அனுமதி கேட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள ஆட்டோ டிரைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்லடம் தாசில்தார் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.
இதனால், ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற சப்-கலெக்டர் சவுமியா, விரைவில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். அதன்படி, சப் - கலெக்டர் தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம், கலெக்டர் அலுவலக வளாதத்தில் நடந்தது.
பங்கேற்ற ஆட்டோ டிரைவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகளை கேட்டறிந்த சப் கலெக்டர், விரைவில், பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, அதனை தொடர்ந்து, உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
பல்லடத்தில் இப்பிரச்னை கொழுந்து விட்டெரிவதால், விரைவில் தீர்வு காணப்படுவது அவசியம்.