/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் கபடி அணிக்கு சீருடை வழங்கும் விழா
/
பெண்கள் கபடி அணிக்கு சீருடை வழங்கும் விழா
ADDED : ஜூலை 23, 2024 11:30 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கபடி அசோசியேஷன் சார்பில், ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி கபடி அணிக்கு, பயிற்சி முகாம் துவக்கம் மற்றும் சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது.
கபடி கழக தலைமை புரவலரும், துணை மேயரருமான பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன், மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவு கபடி மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் சீருடை வழங்கப்பட்டது.
ஜெயசித்ரா சண்முகம் பேசுகையில்,' விளையாட்டில் மட்டுமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உண்டாகிறது. இதனால், பிற வீராங்கனைகளிடத்தில் நட்பும், தனி மனித தலைமைப் பண்பும் வளர்கிறது. இப்பள்ளியில் விரைவில் கபடி ஆடுகளம் விரிவாக அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்,' என்றார்.
மாவட்ட கபடிக் கழக புரவலர் மகாலட்சுமி ரத்தினசாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணைத் தலைவர்கள் ராமதாஸ், நாகராஜ், நடுவர் குழு சேர்மன் முத்துச்சாமி, துணைச் செயலாளர் செல்வராஜ், வளர்ச்சிக்குழுத் தலைவர் ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.