/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வினியோகம்
/
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வினியோகம்
ADDED : மார் 07, 2025 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,:
உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 30க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான சீருடைகள் ஒவ்வொரு பிரிவாக வழங்கப்பட்டது.
மொத்தமாக நான்கு செட் சீருடைகள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படுகிறது. நான்காவது செட் சீருடை தற்போது பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில், வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் ஆகியோர், மாணவர்களுக்கு நான்காவது செட் சீருடைகளை வழங்கினர்.