தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 500 மாணவ மாணவியருக்கு சீருடை, நோட்டு புத்தகம்

500 மாணவ மாணவியருக்கு சீருடை, நோட்டு புத்தகம்

500 மாணவ மாணவியருக்கு சீருடை, நோட்டு புத்தகம்


ADDED : மே 27, 2024 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 01:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:என்.எம்.சி.டி., சேவை நிறுவனம், 35 ஆண்டாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங் களைச் சேர்ந்த எளிய குடும்ப மாணவர்கள் கல்விக்காக உதவி வழங்கி வருகிறது. அவ்வகையில் ரோஜாக்கூட்டம் என்ற பெயரில் இதற்கான நிகழ்ச்சி 17வது ஆண்டாக திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப்பை, நோட்டு புத்தகம் உள்ளிட்டவையும், 20 பேருக்கு உயர்படிப்புக்கான கல்விக்கட்டணமும் வழங்கப்பட்டது.திருப்பூர் சேவா சமிதி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அதன் இயக்குனர் சங்கரநாராயணன் வரவேற்றார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us