sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தெரியாத' வேகத்தடை; சரியும் வாகனங்கள்

/

'தெரியாத' வேகத்தடை; சரியும் வாகனங்கள்

'தெரியாத' வேகத்தடை; சரியும் வாகனங்கள்

'தெரியாத' வேகத்தடை; சரியும் வாகனங்கள்


ADDED : மார் 10, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், பூலுவபட்டி - பூண்டி ரிங் ரோடு சிக்னல் அருகே கேட்வால்வு பழுதாகி இருப்பதால், தொடர்ந்து தண்ணீர் வீணாகி, ரோட்டில் ஓடுகிறது.

- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)

அவிநாசி ரோடு, குமார் நகர் - அங்கேரிபாளையம் ரோடு சந்திப்பு ரவுண்டானா அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சங்கரன், குமார் நகர். (படம் உண்டு)

திருப்பூர், கொடிக்கம்பம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எதிர்வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

- நரேன் கார்த்தி, பாப்பநாயக்கன்பாளையம். (படம் உண்டு)

பங்களா ஸ்டாப் சிக்னல் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வினியோகிக்கும் போதெல்லாம் வீணாகி, கால்வாயில் கலக்கிறது.

- பூபாலன், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

மண்ணரை, செல்வபுரம், ஐந்தாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது.

- சதாசிவம், செல்வபுரம். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

15 வேலம்பாளையம் ரிங் ரோட்டில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடந்து செல்ல வழியில்லாமல் சிரமப்படுகின்றனர்.

- தியாகராஜன், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)

தடுமாறும் வாகனங்கள்

பத்மாவதிபுரம் 3வது வீதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வேகமாக வந்து தடுமாறுகின்றனர். வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும்.

- சங்கர், பத்மாவதிபுரம். (படம் உண்டு)

சாலையில் குழி

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப் ரவுண்டானா சந்திப்பு அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் வாய்ப்புள்ளது.

- சத்தியமூர்த்தி, பாளையக்காடு. (படம் உண்டு)

பணி மந்தம்

சந்திராபுரம், பாரதி நகரில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய குழி பணி முடிந்து மூடப்படவில்லை. வாகனங்கள் சென்று வர முடியவில்லை.

- ராமராஜ், சந்திராபுரம். (படம் உண்டு)

மீட்டர் திருட்டு

வீரபாண்டி, கல்லாங்காடு கணபதி நகர் முதல் வீதியில் மாநகராட்சி குடிநீர் குழாய் இணைப்பில் பொருத்தப்படும் மீட்டர்கள் மர்மநபர்களால் திருடப்படுகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

- முத்துக்குமார், கல்லாங்காடு. (படம் உண்டு)

சுகாதாரச் சீர்கேடு

திருப்பூர், தோட்டத்துப்பாளையம், சாஸ்தா நகர் ஏழாவது வீதியில் குப்பை தொட்டிகள் நிறைந்தும், குப்பை எடுக்கப்படாமல் அப்படியே உள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- கீதா, சாஸ்தா நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

சுத்தமானது கால்வாய்

திருப்பூர், 15 வேலம்பாளையம், 25ம் நம்பர் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஓடியது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, அடைப்பு சரிசெய்யப்பட்டு, மண் கொட்டப்பட்டுள்ளது.

- கார்த்தி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us