/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் தீராத தெருநாய் தொல்லை
/
பல்லடத்தில் தீராத தெருநாய் தொல்லை
ADDED : அக் 24, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் பகுதியில், பொதுமக்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தெருநாய்கள் மாறிவிட்டன.
பொதுமக்கள் கூறுகையில், ''வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும்போது, அவற்றால் பாதிப்புகள் ஏற்படும் என்பதாலேயே, அவை பிடித்துச் செல்லப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்படுகின்றன. இதேபோல், தெரு நாய்களையும் பிடித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு, பிடித்துச் செல்லப்படும் தெரு நாய்கள் கு.க., செய்யப்பட்டு பாதுகாப்புடன் பராமரிக்க, தமிழக அரசே அதற்கான காப்பகங்களை உருவாக்க வேண்டும்'' என்கின்றனர்.

