/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு காணப்படாத ஆட்டோ டிரைவர் விவகாரம்
/
தீர்வு காணப்படாத ஆட்டோ டிரைவர் விவகாரம்
ADDED : ஜூன் 26, 2024 10:56 PM
பல்லடம் : பல்லடத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்த அனுமதிக்குமாறு, புதிதாக சிலர் விண்ணப்பித்த நிலையில், ஏற்கனவே உள்ள ஆட்டோ டிரைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பினர் இடையே நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், சப் கலெக்டர் சவுமியா, ''விரைவில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஆட்டோ டிரைவர்களால், பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் சப் கலெக்டரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்கள், பஸ் ஸ்டாண்டை ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றி விடுமாறும் வலியுறுத்தினர்.
ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்டு வரும் முரண்பாடு காரணமாக, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. உரிமத்தின் அடிப்படையில், ஆட்டோ டிரைவர்களுக்கு அனுமதி வழங்குவதுடன், போக்கு வரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், ஆட்டோ ஸ்டாண்ட்களை அமைக்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்கள் இடையிலான இப்பிரச்னைக்கு தற்போது தீர்வு காணவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் ஐயமில்லை.