/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
; எடுபடாத பந்துவீச்சு... சோபிக்காத பேட்டிங் கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை
/
; எடுபடாத பந்துவீச்சு... சோபிக்காத பேட்டிங் கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை
; எடுபடாத பந்துவீச்சு... சோபிக்காத பேட்டிங் கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை
; எடுபடாத பந்துவீச்சு... சோபிக்காத பேட்டிங் கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை
ADDED : நவ 03, 2024 11:26 PM

நியூசிலாந்து அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி கண்டு, டெஸ்ட் தொடரை, சொந்த மண்ணிலேயே இழந்துள்ளது. இது கிரிக்கெட் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து சுழல் சிக்கல்
வெள்ளியங்கிரி, காமநாயக்கன்பாளையம்: ஜெய்ஸ்வால், சுப்மன்கில் மட்டுமே நியூசிலாந்து சூழலை சந்தித்து, ரன் சேர்த்து, கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர்.
ஆல்-ரவுண்டராக ஜடேஜா பங்களிப்பை வழங்கினர். அஸ்வின் சுழல் அவ்வளவாக எடுபடவில்லை. பும்ரா சோபிக்கவில்லை.
நம் அணியை விட, நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டனர்; வெற்றியும் பெற்று, தொடரை கைப்பற்றினர்.
தமிழக வீரர் வாஷிங்டன்சுந்தர் சிறப்பாக பந்து வீசினார். ரோஹித், கோலியின் ஆட்டம் எடுபடவில்லை. தரமான பந்துவீச்சு இல்லாதது, போட்டியில் பெரிய பலவீனமாக அமைந்து விட்டது. சுழற்பந்தை கவனமுடன் எதிர்கொள்ள வேண்டிய பக்குவம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு போதவில்லை.
தரமற்ற பந்துவீச்சு
சுனில், கல்லம்பாளையம்: பேட்டிங்கில் குறைகளை கூறினாலும், பந்துவீச்சு தரமாக இல்லாதது தான் ரன்குவிப்பை தடுக்க முடியாத பெரிய பலவீனமாக அமைந்து விட்டது.
இந்த முறை ஏனோ பும்ராவுக்கு பவுலிங் எடுபடவில்லை. குறைவான ஓவரே பும்ராவுக்கு தரப்பட்டது. துவக்கத்தில் வாஷிங்டன் சுந்தர் ஜொலித்தார், நிறைவில் அதுவும் எடுபடவில்லை.
ஜெய்ஸ்வால் கவனமுடன் விளையாடி, தேவையற்ற ஷாட்களை தவிர்த்திருக்க வேண்டும்.
அனுபவ வீரர்கள் இப்படி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. பொறுப்பற்ற ஆட்டம் ஆடினார்கள் என்றால் பொருத்தமாக இருக்கும்.
'டாப்-ஆர்டர்' மாறுதல்கள் நிறைய செய்ய வேண்டும். அப்போதெல்லாம் ஒரு இன்னிங்சை மூன்று நாள் ஆடிய அணி, முழுமையாக ஒரு நாள் பேட்டிங் கூட செய்ய முடியாதது கவலையளிக்கிறது. அடுத்த வர உள்ள ஆஸி., போட்டி பெரும் சவாலாக இருக்கும்.
ரோகித், ேஹாலி மூன்று டெஸ்ட் ஆறு இன்ஸி.,சேர்த்து, 100 ரன் கூட வரவில்லை என்றால், அப்புறம் என்ன அனுபவம்? உலக டெஸ்ட் பைனலுக்கு நாம் முன்னேற வேண்டும் என்றால், அடுத்து வரும் ஆஸி., தொடரில் கட்டாயம் வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும்.
பேட்ஸ்மேன்கள் மோசம்
பிரபாகர், காந்தி நகர்: டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது தொடர்கிறது. வேகத்தில் அசத்தும் வீரர்கள், சுழலில் திணறுகின்றனர். டெஸ்ட் தொடரில் பந்து வீணடிக்கப்பட்டாலும் நிலைத்து நின்று ஆட வேண்டும்.
இந்திய அணியிடம் மட்டுமே முன்பு இருந்த அந்த பக்குவம் தற்போது இல்லை. தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்.
அடுத்த தலைமுறை வீரர்களை கட்டாயம் கண்டறிய வேண்டிய தருணமிது. சாய்சுதர்சன், நடராஜன், புஜாராவுக்கு அடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்க வேண்டும்.