/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்பாட்டுக்கு வராத டூவீலர் ஸ்டாண்ட்
/
பயன்பாட்டுக்கு வராத டூவீலர் ஸ்டாண்ட்
ADDED : செப் 06, 2024 01:51 AM

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் இருந்த பழைய டூ வீலர் ஸ்டாண்ட் இடித்து அகற்றப்பட்டு, 59 லட்சம் ரூபாய் செலவில் புதிய டூவீலர் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதன் பணிகள் முடிந்து, ஓராண்டுக்கு மேல் ஆகியும், டூவீலர் ஸ்டாண்ட் பயன் பாட்டுக்கு வரவில்லை.
பஸ் ஸ்டாண்டுக்குள் டூவீலர் ஸ்டாண்ட் இருந்தால், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர், தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு உடனடியாக பஸ் ஏறி செல்ல முடியும். இதனால், நேர விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, எதிர்புறம் உள்ள டூவீலர் ஸ்டாண்டுகளுக்கு செல்வதால் ஏற்படும் விபத்து அபாயமும் தவிர்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணி முடிந்தும், நகராட்சி டூவீலர் ஸ்டாண்ட் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பல்லடம் பஸ் ஸ்டாண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், நகராட்சி டூவீலர் ஸ்டாண்டில் பார்க்கிங் செய்யப்பட்டு வந்தன. கடந்த, 2022-- 23ம் ஆண்டு, குத்தகைக்கு விட்டதில், 17 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, கட்டுமான பணி காரணமாக, தொடர்ந்து, டூவீலர் ஸ்டாண்ட் செயல் படவில்லை. இதனால், இரண்டு ஆண்டுகளாக, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக ஏலம் நடத்தி, டூவீலர் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் வாயிலாக, நகராட்சிக்கு வருவாய் கிடைப்பதுடன், பொதுமக்களும் பயன்பெறுவர்.