/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திண்டுக்கல் மலை கோவிலில் அம்மன் திருமேனி மீண்டும் பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தல்

ADDED : ஆக 04, 2024 11:52 PM
திருப்பூர்:'திண்டுக்கல், மலைக்கோவிலில் அம்மனின் திருமேனியை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
திண்டுக்கல், மலைக்கோவிலில், 1,000 ஆண்டுகள் முன் பத்மகிரீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் திருமேனிகளை நிறுவி, மன்னர் தர்மபாலர் வழிபட்டு வந்தார். 16ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில், அபிராமி அம்மனுக்கு கிருஷ்ணப்ப நாயக்கர் விசாலமாக கோவிலை எழுப்பினார்.
திப்பு சுல்தான் காலத்தில் கோவிலில் உள்ள சாமி விக்ரகங்கள் அகற்றப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டன. இதனால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு, கிளர்ச்சி உருவானதால், முகலாய அரசு மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் அம்மனை பிரதிஷ்டை செய்தனர்.
அப்போதிருந்தே மலைக்கோட்டையில் மறுபடியும் அம்மனை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், தொடர் போராட்டமும் நடந்து கொண்டே வந்தது. நமது வரலாற்றின், பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் மலை மீது அமைந்துள்ள கோவிலில் சுவாமி இல்லாததால், பராமரிக்கப்படாமல் புதர் மண்டியும், சிற்பங்கள் சிதிலமடைந்தும் வருகின்றன.
இதை காப்பது அரசின் தலையாய கடமை. இதற்கு, அம்மன் திருமேனியை மீண்டும் மலைக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதே சரியான தீர்வு.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.