/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டவிரோத மது விற்பனை கடையை அகற்ற வலியுறுத்தல்
/
சட்டவிரோத மது விற்பனை கடையை அகற்ற வலியுறுத்தல்
ADDED : மே 03, 2024 11:37 PM
அவிநாசி;கடந்த, 1ம் தேதி தமிழகத்தில் அனைத்து 'டாஸ்மாக்' கடைகள், 'பார்கள்' ஆகியவற்றில் மது விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அவிநாசியில், கால்நடை மருத்துவமனை எதிரில், உள்ள 1923 எண் கொண்ட மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையறிந்த, அவிநாசி போலீசார்,
மதுரை மாவட்டம், திருப்பாலை பகுதி தாகூர் நகரை சேர்ந்த மணிமாறன் 32, என்பவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, முத்து செட்டிபாளையம், சேவூர் செல்லும் பிரதான ரோட்டில் செயல்படுகிறது. இவ்வழியே புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், திருவள்ளுவர் துவக்கப்பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளது.
இவற்றுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலை வேலைகளில் மது அருந்திவிட்டு குடிமகன்கள் ஆங்காங்கே அரைகுறை ஆடையுடன் விழுந்து கிடப்பதாலும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தகாத வார்த்தைகளில் பேசுவதும், பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும், என்றனர்.