/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தீர்வு காண வலியுறுத்தல்
/
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தீர்வு காண வலியுறுத்தல்
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தீர்வு காண வலியுறுத்தல்
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2024 11:21 PM
திருப்பூர்:'இடி, மின்னலை சமாளிக்க கூடிய வகையில் மின் உபகரணங்களை பொருத்தி, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தவிர்க்க வேண்டும்' என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், கோவை மண்டல மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் சுப்ரமணியம் தலைமையில், நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா, செயலாளர் கிறிஸ் டோபர் பேசியதாவது:
இக்கூட்டம் நடத்தப்படுவது தொடர்பாக, ஒரே வாரத்தில், 3 முறை தேதி மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வரும் நாட்களில் தேதி மாற்றத்தை தவிர்க்க வேண்டும்.
அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் சிறிய மழை, காற்றின் போதே மின் இணைப்பு துண்டிக்கப்படுவது தொடர் கதையாகிறது.
மின்கம்பிகளை இணைக்க செராமிக் டிஸ்க் மற்றும் இன்சுலேட்டர் இணைப்பானை படிப்படியாக அகற்றிவிட்டு, இடி, மின்னலை சமாளிக்கும் திறன் கொண்ட பாலிமர் தர இணைப்பை பொருத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கம்பங்களை உரசியபடி செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.