/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்
/
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்
ADDED : மே 01, 2024 12:28 AM

உடுமலை:உடுமலை பொன்னேரி கால்நடை மருந்தகம் சார்பில், கோட்ட மங்கலம் கிராமத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
உடுமலை பகுதிகளில், கால்நடைத்துறை சார்பில், ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் பாதிப்பை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் முகாம், கிராமங்கள் தோறும் நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், உடுமலை கோட்டத்தில், 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த, ஏப்., 29 முதல், மே மாத இறுதி வரை, கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பொன்னேரி கால்நடை மருந்தகம் சார்பில், கோட்டமங்கலம் கிராமத்தில், தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
கால்நடைத்துறை டாக்டர் கோவிந்தராசு தலைமையில், மருத்துவக்குழுவினர், நுாற்றுக்கணக்கான ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.