ADDED : செப் 09, 2024 01:43 AM

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ காமாட்சியம்மன் மகளிர் பேரவை மற்றும் வேலவன் வள்ளி கும்மி ஆய்வு மையம் இணைந்து இதன் இரண்டாவது அணியின் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்தன.
காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை, பேரவையின் கவுரவ தலைவர் பத்மா சிவலிங்கம் துவக்கி வைத்தார். தென்னிந்திய மகாஜன சங்க தலைவர் செல்வராஜ், முன்னாள் சுங்க வரித்துறை அலுவலர் ரகுநாதன், இமைகள் கண் தான கழக நிர்வாகி சுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் மீனாமுரளி முன்னிலை வகித்தார். முன்னதாக செயலாளர் அமுதா ராமசாமி வரவேற்றார், காமாட்சியம்மன் திருமண மண்டப பரிபாலன டிரஸ்ட் நிர்வாகிகள் சுப்ரமணியம், முருகேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதில் வள்ளி கும்மி பயிற்சி பெற்ற இரண்டாவது அணியினர் கும்மி ஆட்டத்தை அரங்கேற்றம் செய்தனர். உமா சீனிவாசன் நன்றி கூறினார்.