/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிவேகத்தில் வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் பணிகள்
/
அதிவேகத்தில் வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் பணிகள்
ADDED : மே 13, 2024 12:14 AM

திருப்பூர்:கோவை - திருப்பூர் வழித்தடத்தில் வஞ்சிபாளையம் ஸ்டேஷனில் புதிய கூட்ஸ்ஷெட் அமைப்பதற்கான பணிகள் சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, சரக்குகள் ஏற்றி, இறக்கப்படும் வாய்ப்புள்ளது.
வட மாநிலங்களில் இருந்து கோதுமை, சோயா, புண்ணாக்கு, அரிசி, கோழித்தீவனம் உள்ளிட்டவை வந்திறங்குவதால் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ஷெட் எப்போதுமே 'பிஸி'யாக இருக்கும். நகரின் மையப்பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ஷெட் இருப்பதால், அதிக பாரத்துடன் புறப்படும் லாரிகள் போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளியேறவே, ஒரு மணி நேரமாகிறது. ஒரே நேரத்தில் அதிக சரக்கு புக்கிங் வரும் போது, சரக்கு ரயில் நிறுத்த இடமில்லாமல், ஈரோடு அல்லது கோவையில் ரயிலை நிறுத்தி, அங்கிருந்து லாரிகள் மூலம் சரக்குகளை இடமாற்ற வேண்டியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் முன் வஞ்சிபாளையம் ஸ்டேஷன் புதிய கூட்ஸ்ெஷட்டுக்கு இடமாக தேர்வு செய்யப்பட்ட போதும், நிர்வாக ரீதியான பணி துவங்காமல் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டது. மே துவக்கம் முதல் வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட்டுக்கென பிரத்யேக டிராக் மற்றும் பிளாட்பார்ம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பொறியியல், தொழில்நுட்ப பிரிவினர் புதிய தண்டவாளம் பதிப்பு, சிக்னல், மின் இணைப்பு பணிகளை துவக்கியுள்ளனர்.
----
வஞ்சிபாளையத்தில் கூட்ஸ்ெஷட் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கான 'டிராக்' அமைக்கப்பட்டு வருகிறது.
'டிராக்' அமைக்கும் பணி ஆய்வு செய்யப்படுகிறது.