/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பணிபுரியும் ஊராட்சியில் வசிக்காத வி.ஏ.ஓ.,க்கள்'
/
'பணிபுரியும் ஊராட்சியில் வசிக்காத வி.ஏ.ஓ.,க்கள்'
ADDED : ஜூன் 26, 2024 10:56 PM
அனுப்பர்பாளையம் : அவிநாசி - - அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், அவிநாசி ஜமாபந்தி அலுவலரிடம் அளித்த மனு:
ஊராட்சியில் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் காலை சரியாக 10:00 மணிக்கு அலுவலகம் வருவதில்லை. அதுபோல், மாலை 5:00 மணிவரை அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதில்லை.
இது தொடர்பாக ஆய்வு செய்து, கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து ஊராட்சிகளிலும் சரியான நேரத்திற்கு வந்து, சரியான நேரம் வரை அலுவலகத்திலேயே இருந்து, மக்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும் தாங்கள் பணியமர்த்தப்பட்ட ஊராட்சிகளிலேயே குடியிருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை; இது பின்பற்றப்படுவதில்லை.
பல ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாளர் பற்றாக்குறை உள்ளது. உதவியாளர்களைப் பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.