ADDED : மே 16, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : டூவீலர் மீது கிரேன் மோதிய விபத்தில் வி.சி.க., பெண் நிர்வாகி பலியாகினார்.
திருப்பூர் அருகே பெருமாநல்லுார் மின்வாரிய அலுவலகம் அருகே வசிப்பவர் செந்தில்குமார் மனைவி காளியாதேவி, 40. திருப்பூர் மாநகர் மாவட்ட வி.சி.க., மகளிரணி செயலாளர். நேற்று முன்தினம் இரவு குன்னத்துாரில் இருந்து பெருமாநல்லுாருக்கு டூவீலரில் சென்றார்.
அதே வழியில் வந்த கிரேன் இவரது டூவீலர் மீது மோதியது, இதில் பலத்த காயமடைந்த காளியாதேவி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், உயிரிழந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.