/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., சார்பில் 'வெஜ் பிரியாணி'
/
அ.தி.மு.க., சார்பில் 'வெஜ் பிரியாணி'
ADDED : மே 13, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தெற்கு தொகுதியில் நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
விஜயாபுரம், ராக்கியாபாளையம் பிரிவு, செரங்காடு, எம்.பி., நகர் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில், ஜெ., பேரவையின் மாநில இணை செயலாளர் குணசேகரன், பொதுமக்களுக்கான அன்னதானத்தை துவக்கி வைத்தார்; 'வெஜ் பிரியாணி' வழங்கப்பட்டது. நல்லுார் பகுதி செயலாளர் குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சக்திவேல் உட்பட, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.