/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு சந்திப்பில் மெகா குழி தடுமாறும் வாகனங்கள்
/
ரோடு சந்திப்பில் மெகா குழி தடுமாறும் வாகனங்கள்
ADDED : ஜூலை 01, 2024 02:36 AM

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், ஐஸ்வர்யா நகர் ரோடு இணையும் சந்திப்பு பகுதி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து இந்த சந்திப்பு வரை, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மறுபுறத்திலுள்ள வணிக வளாகங்கள், கடைகளுக்கு செல்ல, இந்த சந்திப்பு பகுதிக்கு வந்தே வாகனங்கள் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது.
எனவே, காலை, மாலை நேரங்களில், சந்திப்பு பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில், அவ்விடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், குழி ஏற்பட்டு, சீரமைக்கப்படாமல், மெகா குழியாக மாறி விட்டது.
சந்திப்பு பகுதியை கடக்க, நெடுஞ்சாலையின் இருபுறங்களையும் பார்த்தபடி வரும் வாகன ஓட்டுநர்கள், இந்த குழியில் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் பயன்படுத்தும் இந்த ரோட்டிலுள்ள மெகா குழியை உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.