/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வில் மதிப்பெண் அள்ளிய வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி
/
தேர்வில் மதிப்பெண் அள்ளிய வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி
தேர்வில் மதிப்பெண் அள்ளிய வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி
தேர்வில் மதிப்பெண் அள்ளிய வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி
ADDED : மே 11, 2024 11:33 PM

திருப்பூர் : அவிநாசி, அ.குரும்பபாளையத்தில் செயல்படும் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி மாணவி நவநிதா, 500க்கு, 488 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். தேர்வெழுதிய, 86 பேரில், 55 பேர், 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி சத்ய வைஷ்ணவி, 600க்கு 587 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்; அத்துடன், அறிவியல் பாடப் பிரிவில், அவிநாசி வட்டார அளவில் முதலிடம் பெற்றார். தேர்வெழுதிய, 96 பேரில், 49 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். பொறியியல் கட் ஆப் மதிப்பெண்களில், 13 பேர், 180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்கள், உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர் களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.