/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை மேயர் முற்றுகை; மக்கள் ஆவேசம்
/
துணை மேயர் முற்றுகை; மக்கள் ஆவேசம்
ADDED : ஆக 03, 2024 06:12 AM

அனுப்பர்பாளையம்: வார்டில் சாலை வசதி கோரி, துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவரை, ஏழாவது வார்டு மக்கள் முற்றுகையிட்டனர்.
-திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி, இந்திய கம்யூ., மாநகராட்சி இரண்டாவது மண்டல செயலாளர் சசிகுமார், போயம்பாளையம் கிளை செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் பலர், நேற்று காலை இரண்டாம் மண்டல அலுவலகம் வந்தனர்.
துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''போயம்பாளையம் பகுதியில் உள்ள சக்தி நகர் முதல் வீதி, கணபதி நகர் முதல் வீதி, சதாசிவம் நகர் மெயின் வீதி ஆகியவற்றில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க ரோட்டில் குழி தோண்டப்பட்டது.
குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. பல்லாங்குழி ரோட்டை புதுப்பிக்க கோரி மாநகராட்சி முதல் மண்டல அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எங்கள் வீதியை சுற்றியுள்ள வீதிகளில் ரோடு அமைக்கப்படுகிறது. எங்கள் வீதிகள் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது'' என்றனர்.
துணை மேயர், தலைவர் மற்றும் அதிகாரிகள், 'இரண்டு மாதங்களில் ரோடு அமைத்து தரப்படும்' என்று உறுதியளித்தனர்.