/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றியின் முகவரிக்கு வித்யா விகாஸ் பள்ளி
/
வெற்றியின் முகவரிக்கு வித்யா விகாஸ் பள்ளி
ADDED : மே 11, 2024 11:34 PM

திருப்பூர் : திருப்பூர், குளத்துப்பாளையம் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில், அபார சாதனை படைத்துள்ளது.
மாணவி அனீஷா, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். இதுதவிர, 495 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில், 4ம் இடத்தையும் ெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஹரீஸ் கார்த்திக், கணிதம், சமூக அறிவியலில் சதமடித்து, 494 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாமிடம். ரிதன்யா, 491 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றுள்ளார். தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணிதத்தில், 10 பேர், சமூக அறிவியல்- 3, அறிவியல் - 2 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரையும், ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி, நிர்வாக அலுவலர் சிவகுருநாதன், துணை தாளாளர்கள் சுபாஷ் தண்டபாணி, தரணீதரன் தண்டபாணி, பள்ளி முதல்வர் தனபாக்கியம் ஆகியோர் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.