/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்ய விகாசினி பள்ளி மாணவி அபார சாதனை
/
வித்ய விகாசினி பள்ளி மாணவி அபார சாதனை
ADDED : மே 16, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய்நகரில் உள்ள வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி, பிரகல்யா, வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று, மொத்தம், 600க்கு, 593 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவி பிரகல்யாவை, பள்ளியின் தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி, செயலாளர் நகுலன் ப்ரணவ், பள்ளி முதல்வர் அன்பரசு, பள்ளியின் துணை முதல்வர் ஈஸ்வரி, ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.