/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதி பெற்று கொடியேற்றுவோம்: விஜய் கட்சியினர் சொல்கின்றனர்
/
அனுமதி பெற்று கொடியேற்றுவோம்: விஜய் கட்சியினர் சொல்கின்றனர்
அனுமதி பெற்று கொடியேற்றுவோம்: விஜய் கட்சியினர் சொல்கின்றனர்
அனுமதி பெற்று கொடியேற்றுவோம்: விஜய் கட்சியினர் சொல்கின்றனர்
ADDED : ஆக 26, 2024 11:15 PM
திருப்பூர்:நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை நிறுவி, சமீபத்தில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். திருப்பூர் மாவட்டத்தில், பல இடங்களில், ரசிகர் மன்றங்கள் கட்சி கிளைகளாக உருவெடுத்துள்ளன.'ஒவ்வொரு வார்டு, கிளைகளிலும் கட்சிக் கொடியேற்றுவோம்' எனக் கூறியிருந்த நிலையில், நேற்று முன்தினம், அவர்கள் கட்சி கொடியேற்ற முற்பட்ட போது, போலீசார் தடுத்தனர். 'அனுமதி பெறாமல் கட்சிக் கொடியேற்றக்கூடாது' என, தெரிவித்துள்ளனர். இதனால், கட்சியினர் கொடியேற்றாமல் திரும்பிச் சென்றனர்.
கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் விஜய் கூறுகையில், ''மக்கள் இயக்கமாக எங்கள் கொடி ஏற்கனவே, பல இடங்களில் பறந்து கொண்டு தான் இருக்கிறது. அங்கு கட்சிக் கொடியேற்ற முயன்றோம். போலீசார், மாநகராட்சி கமிஷனரிடம் தகவல் சொல்லியுள்ளோம். இருப்பினும், கட்சியாக மாறியதால், கட்சிக் கொடியேற்ற எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என போலீசார் கூறினார். முறைப்படி அனுமதி பெற்று, கட்சி கொடியேற்றுவோம்,'' என்றார்.