sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பரபரப்பான கபடிப்போட்டி இறுதி வினாடிகள் வெற்றியை வசமாக்கிய விஜயாபுரம் பள்ளி அணி

/

பரபரப்பான கபடிப்போட்டி இறுதி வினாடிகள் வெற்றியை வசமாக்கிய விஜயாபுரம் பள்ளி அணி

பரபரப்பான கபடிப்போட்டி இறுதி வினாடிகள் வெற்றியை வசமாக்கிய விஜயாபுரம் பள்ளி அணி

பரபரப்பான கபடிப்போட்டி இறுதி வினாடிகள் வெற்றியை வசமாக்கிய விஜயாபுரம் பள்ளி அணி


ADDED : ஆக 30, 2024 10:56 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தெற்கு குறுமைய மாணவியர் கபடி போட்டி, 19 வயது பிரிவில், விஜயாபுரம் - வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணிகள், வெற்றியை கைப்பற்ற கடைசி வரை போராடின. சமநிலை பெற்றதால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், விஜயாபுரம் பள்ளி அணி வெற்றி பெற்றது.திருப்பூர், முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரியில், தெற்கு குறுமைய மாணவியர் கபடி போட்டி நேற்று நடந்தது. 14 வயது பிரிவில், சர்க்கார் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 35 - 10 என்ற புள்ளிக்கணக்கில் மணி பப்ளிக் அணியை வீழ்த்தியது. 17 வயது பிரிவிலும் அசத்திய, சர்க்கார் பெரியபாளையம் பள்ளி அணி, 33 - 29 என்ற புள்ளிக்கணக்கில், விவேகானந்தா வித்யாலயா அணியை வென்றது.பத்தொன்பது வயது பிரிவில், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி - வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி மோதிய போட்டி, துவக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. அடுத்தடுத்து இரு அணி வீராங்கனைகளும் புள்ளிகளை குவிக்க, ஆட்ட நேர இறுதியில், 26 - 26 என்ற சமநிலை எட்டியது. கூடுதல் நேர ஒதுக்கீட்டில் நடந்த போட்டியில், 6 - 5 என்ற புள்ளிக்கணக்கில் விஜயாபுரம் அணி, வெற்றி பெற்று அசத்தியது; வீரபாண்டி பள்ளி அணி போராடி தோற்றது.மாணவர் கபடி, 14 வயது பிரிவில், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி - வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை, 47 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

கோகோ; கே.எஸ்.சி., அசத்தல்

தெற்கு குறுமைய மாணவர் கோகோ போட்டியில், 14 வயது பிரிவில், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி, கொங்கு மெட்ரிக் பள்ளி அணியை, 12 - 9 என்ற புள்ளிக்கணக்கிலும், 19 வயது பிரிவில், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி, மணி பப்ளிக் பள்ளி அணியை, 5 - 7 என்ற புள்ளிக்கணக்கிலும் வென்றது.

---

திருப்பூர் தெற்கு குறு மைய மாணவர் பிரிவு கோ -கோ இறுதிப்போட்டி முதலிபாளையம் நிப்ட்- டீ கல்லுாரியில் நடந்தது. மாணவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கே.எஸ்.சி., அரசு பள்ளி அணி மணி பப்ளிக் பள்ளி அணியை 20:11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

மாணவியர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எம்.என்.எம்.சி., பள்ளியுடனான கபடிப்போட்டியில், விஜயாபுரம் அரசுப் பள்ளி அணி 31-25 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

'பீச்' வாலிபால்வித்ய விகாசினி அசத்தல்

திருப்பூர், ஜெய்நகர், வித்யவிகாசினி பள்ளியில், தெற்கு குறுமைய பீச் வாலிபால் போட்டி நேற்று நடந்தது. மாணவியர், 14 மற்றும், 17 வயது பிரிவு இரண்டிலும் வித்யவிகாசினி பள்ளி முதலிடம், பிரன்ட்லைன பள்ளி, 2 வது இடம். 19 வயது பிரிவில், வித்யவிகாசினி பள்ளி முதலிடம், வேலவன் மெட்ரிக், 2 வது இடம். மாணவர் 14 மற்றும், 19 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி முதலிடம், வேலவன் மெட்ரிக், 2 வது இடம், 17 வயது பிரிவில், வித்ய விகாசினி முதலிடம், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2 வது இடம்.








      Dinamalar
      Follow us