/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிராம பூசாரிகள் எதிர்பார்ப்பு
/
ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிராம பூசாரிகள் எதிர்பார்ப்பு
ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிராம பூசாரிகள் எதிர்பார்ப்பு
ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிராம பூசாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 31, 2024 01:38 AM
திருப்பூர்;தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை மற்றும் அருள் வாக்கு பேரவை சார்பில், கொங்கு மண்டல பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லுாரில் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட பூசாரிகள் பேரவை இணை அமைப்பார் மணியன் வரவேற்றார். கோவை இந்தரேஷ்வர மடாலயம் ஸ்ரீ ராஜ தேவேந்திர சுவாமிகள், மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம், மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், மண்டல அமைப்பு செயலாளர் குமரவேல், சிவகுரு, சிவ ஸ்ரீ சிவமந்திர சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அங்கேரிபாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக கூறி, இடிக்க உள்ள தமிழக அரசின் முடிவை மாற்றி கொள்ள வேண்டும். கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின் போது, அந்தந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். தி.மு.க., அரசு தனது வாக்குறுதிபடி, அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்க தொகையாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.