/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிந்து விழும் நிழற்கூரை கிராம மக்கள் அச்சம்
/
இடிந்து விழும் நிழற்கூரை கிராம மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 02, 2024 02:26 AM

உடுமலை:சிதிலமடைந்து அச்சுறுத்தும் நிழற்கூரைக்கு கீழ் காத்திருக்கும் நிலையால், ஜக்கம்பாளையம் கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை - கொழுமம் ரோட்டில் இருந்து, 2 கி.மீ., தொலைவில், ஜக்கம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், கொழுமம் ரோட்டுக்கு வந்து பஸ் ஏறிச்செல்கின்றனர்.
இதற்காக, ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில், 2005 - 06ம் ஆண்டில், ஜக்கம்பாளையம் பிரிவில் நிழற்கூரை கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாமல் இந்த நிழற்கூரை கான்கிரீட் கூரை சிதிலமடைந்து இடிந்து விழத்துவங்கியது. கம்பிகள் வெளியே தெரிந்து, நிழற்கூரை எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கிராமத்தில் இருந்து நடந்து வந்து பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள், நிழற்கூரையின் நிலையால், திறந்தவெளியிலேயே நிற்கின்றனர். மழை மற்றும் வெயில் காலத்தில், மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இது குறித்து உடுமலை ஒன்றிய அலுவலகத்துக்கு, பல முறை மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.